பழநியில் ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை
ADDED :1101 days ago
பழநி: பழநியில் வைகாசி மாத பிறப்பு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநியில் வைகாசி மாத பிறப்பு, முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அக்னி நட்சத்திரத்தை விழாவில் வெளியூர், உள்ளூர் பக்தர்கள் மலைகோயில் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வருகை புரிந்தனர். வின்ச், ரோப் கார் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்குச் சென்றனர்.