உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி பால் காவடி பெருவிழா விமரிசை

வைகாசி பால் காவடி பெருவிழா விமரிசை

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அடுத்த முருங்கை கிராமத்தில், நுாறாண்டுகள் பழமை வாய்ந்த வள்ளி, தெய்வசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு, வைகாசி பால் காவடி பெருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.

நேற்று முன்தினம், காலையில் மங்கல இசையுடன், மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதன்பின், சேவல் கொடி ஏற்றுதல், சக்தி கலசம் எடுத்தல், காவடி பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, பால் குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், முன்னக்குளம், அல்லுார், நெடுங்கல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, பொதுமக்கள் பங்கேற்று, முருகப்பெருமானை வழிபட்டனர். இரவு, வாண வேடிக்கையுடன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சுவாமி வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !