பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :948 days ago
கோவை; வேலாண்டிபாளையம் பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
வேலாண்டிபாளையம் பொன்காளியம்மன் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலை புணரமைத்து 33 அடி உயர்த்தில் கல் கோபுரம் நிறுவப்பட்டு மஹா யாகம் நடை பெற்றது. முன்னதாக யாக சாலை ஐந்து கால வேள்விகள் நடத்தப்பட்டு பக்தர்கள்சூழ தீர்த்த கலசம் கோவில் வளாகத்தில ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலஸ்தானம் உட்பட உப தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. தொடர்ந்து கும்பகலசங்களுக்கு தீபாராதனை கண்பிக்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பொன்காளியம்மனை வழிப்பட்டனர்.