உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா

வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 3ல் கம்பம் நடப்பட்டது. 4ல் கொடியேற்றம் நடந்தது மே 10லிருந்து மண்டகப்படிகளில் அம்மன் எழுந்தருளினார். நேற்று முன்தினம் விழா துவங்கியது. அதிகாலை புதுப்பட்டி மண்டகப்படியில் இருந்து முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் வத்தலக்குண்டு கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து பொங்கல் வழிபாடு நடந்தது சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தன. இரவு பூ பல்லக்கில் அம்மன் நகர் வலம் வந்தார். நேற்று அதிகாலை முதல் தீச்சட்டி, அங்கப் பிரதட்சணம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு ஆகிய நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !