உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மராஜர் கோவில் குண்டம் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

தர்மராஜர் கோவில் குண்டம் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை தர்மராஜர் கோவில் குண்டம் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெள்ளமடையில் உள்ள தர்மராஜர் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் கைகளில் குழந்தைகளை ஏந்தியபடி நடந்து சென்று, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மஞ்சள் கரகம், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் மற்றும் திருவிழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !