சிங்கபெருமாள் கோவிலில் இன்று கருட சேவை விழா
ADDED :833 days ago
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம், வைகாசி பிரம்மோற்சவ கொடி காலை 6:00 மணிக்கு ஏற்றப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம், புண்யகோடி விமானத்தில் உற்சவர் பிரகலாதவரதர் ஸ்ரீ தேவி, பூதேவி தாயாருடன், 4 மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான நேற்று காலை, சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும் வீதியுலா வந்து அருளினார். மூன்றாம் நாளான இன்று, கருடசேவை உற்சவம் நடக்கிறது. தினசரி காலை, இரவு வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 30ம் தேதி, முக்கிய நிகழ்வான தேரோட் டம் நடைபெற உள்ளது.