உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரகோட்டம் முருகன் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்

குமரகோட்டம் முருகன் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று, காலை 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலையில் பவளகால் சப்பர வாகனத்திலும், இரவு ஆடு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று காலை முருகன் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை காலை, தேவேந்திர மயில் வாகனத்திலும், இரவு பூத வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் ஜூன் 2ம் தேதி, திருத்தேர் உற்சவமும், 3ம் தேதி வள்ளி திருக்கல்யாணம் உற்சவமும் நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை, இரவு கேடயம் மங்களகிரி வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !