உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமகோடி பீடத்தில் ஸத சண்டி ஹோமம்

காஞ்சி காமகோடி பீடத்தில் ஸத சண்டி ஹோமம்

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானத்தில் ஜூன் 1 முதல் 3 வரை வருடாபிஷேகம், மகா சண்டிஹோமம், மகா பெரியவரின் 130 வது ஜெயந்தி விழா நடக்கிறது. ஜூன் 1 முதல் 3 வரை பூஜைகள், பாராயணம், லட்சார்ச்சனை,ஹோமம், தீபாராதனை ஆகியன காலை 6:30 மணி முதல் நிகழ உள்ளது. ஜூன் 3 ல் அனைத்து சன்னதிகளுக்கும் வருடாபிஷேகம், ஸத சண்டிஹோமம், ருத்ரஏகாதசி காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரஹத்துடன் நடக்கிறது. ஜெயந்தி மஹா உத்ஸவத்தை முன்னிட்டு ஜூன் 1ல் பாலாமணி ஈஸ்வரின் பாடல், பல்லடம் ரவியின் மிருதங்க நிகழ்ச்சி, ஜூன் 2ல் ஆய்க்குடி குமார் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், ஜூன் 3ல் லட்சுமி ராமகிருஷ்ணன், வர்ஷினியின் பாடல் நிகழ்ச்சி, எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜனின் சொற்பொழிவு நடக்கிறது. ஸத சண்டி ஹோமத்தில் 108 கலசங்கள் வைத்து காமாட்சி அம்மனுக்கு நடக்கும் அபிஷேகத்திற்கு தீர்த்த கலசப் பிரசாதம் வேண்டுவோர் குடும்ப நபர்களின் பெயர், நட்சத்திரம் சொல்லி ரூ.4001 செலுத்தி ஸங்கல்ப கைங்கர்யம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 96009 66685 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !