உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை

ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை

உடுமலை:உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவில் பூரம் நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் வைகாசி மாத பூரம் நட்சத்திர நாளை முன்னிட்டு, சுவாமிக்கு பால், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மஞ்சள் நிற பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !