உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய் வழிபாட்டு நாள்: முருகனை வழிபட நல்லதே நடக்கும்

செவ்வாய் வழிபாட்டு நாள்: முருகனை வழிபட நல்லதே நடக்கும்

செவ்வாய்க்கு அதிபதி முருகன் என்பதால், முருகனுக்குரிய கிழமை செவ்வாயாக உள்ளது. இகபர சவுபாக்கியம் அருள்பவன் முருகன். இப்பிறவிக்கு தேவையான பொருட்செல்வத்தையும், மறுபிறவிக்குத் தேவையான அருட்செல்வத்தையும் தன் பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் முருகன். முன்செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள் என்பார் அருணகிரிநாதர். அதனால், முருக நாமத்தைச் சென்னால் முன்வினைப்பாவம் நீங்கி புண்ணியம் சேரும். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுதல் சிறப்பு. இன்று முருகனை வழிபட நல்லதே நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !