உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்முவில் ஜம்மென்று நடந்த திருப்பதி பாலாஜி கோவில் கும்பாபிஷேகம்

ஜம்முவில் ஜம்மென்று நடந்த திருப்பதி பாலாஜி கோவில் கும்பாபிஷேகம்

ஜம்மு–காஷ்மீர் ; திருமலை  திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் உ்ள்ள திருப்பதி சீனிவாசப் பெருமாளின் பக்தர்களுக்காக ஆங்காங்கே திருமலை  திருப்பதியில் உள்ளது போலவே கோவில்  கட்டி வருகிறது.

ஜம்மு–காஷ்மீர் அரசாங்கம் மஜின் கிராமத்தில்  சூர்யபுத்ரி நதிக்கரையில் 62 ஏக்கர்  நிலத்தை கோவில் கட்ட நன்கொடையாக வழங்கியது. அந்த இடத்தில் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவில் கட்டியுள்ளது. திருப்பதி பாலாஜி கோவில் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. கோவில் கோபுரம்,கொடி மரம் மற்றும் கோவிலினுள்   வீற்றிருக்கும் மூலவர் சீனிவாசப்  பெருமாள், பத்மாவதி தாயார் உள்ளீட்ட தெய்வ  விக்ரகங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 10 மணியளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். விழாவில் ஜம்மு சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து ஏாராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.


–எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !