உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.

சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, கரூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை காரில் சென்ற, பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை நாமக்கல் வந்தார். அங்கு, ‘இசட்’ பிரிவு பாதுகாப்புடன், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள், சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினர். அப்போது,  தொடர்ந்து கார் மூலம் கோவைக்கு புறப்பட்டு சென்றார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உடனிருந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல், திடீரென நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலிலுக்கு அண்ணாமலை வந்து சென்றது பக்தர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !