விநாயகர், காளியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED :1211 days ago
பாலமேடு: பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி விநாயகர், காளியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் 48ம் நாள் சிறப்பு யாக பூஜைகள் செய்தனர். சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகளை தொடர்ந்து அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.