திருவாதவூரில் மாணிக்கவாசகர் புறப்பாடு
ADDED :841 days ago
மேலுார்: திருவாதவூரில் ஆனி மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு மாணிக்க வாசகர், திருமறைநாதர் -வேதநாயகி அம்பாள் கோயிலில் இருந்து சப்பரத்தில் அவர் பிறந்த இடத்திற்கு எழுந்தருளினார். அங்கு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் மாணிக்கவாசகர் கோட்டையை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மீண்டும் கோயிலுக்குள் சென்றார். இந் நிகழ்ச்சியில் திருவாதவூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்