/
கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் மூலவர் பெரிய பெருமானுக்கு தைலப் பிரதிஷ்டை மகோத்ஸவம் துவக்கம்
திருக்கோஷ்டியூரில் மூலவர் பெரிய பெருமானுக்கு தைலப் பிரதிஷ்டை மகோத்ஸவம் துவக்கம்
ADDED :843 days ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மூலவர் பெரிய பெருமாளுக்கு தைல பிரதிஷ்டை மகோத்ஸவம் நாளை துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் மூலவர் உரக மெல்லணையான் ஆகிய பெரிய பெருமாள், உபேந்திர நாராயணன், பரமபதநாதன் ஆகிய மூலவர் திருமேனிகளுக்கு சந்தன சாம்பிராணி தைலக்காப்பு சாற்றுதல் என்ற ஜ்யேஷ்டாபிஷேக மகோத்ஸவம் நடைபெறும். நாளை மாலை நரசிம்மர் சன்னதி அருகில் மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. ஜூன் 29 ல் காலை 9:21 மணிக்கு மேல் 10:40 மணிக்குள் தைலப் பிரதிஷ்டை நடைபெறும். தொடர்ந்து 48 நாட்கள் தைலக்காப்பில் மூலவர் திருமேனி இருக்கும்.