கயிலாசநாதர் கோவில் மாணிக்கவாசகர் ஐக்கிய விழா
ADDED :842 days ago
காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஸ்ரீமாணிக்கவாசகர் ஐக்கிய விழா நடைபெற்றது.
காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதசுவாமி திருக்கோவிலில் நேற்று முன்தினம் ஆனிமகத்தை முன்னிட்டு ஸ்ரீமாணிக்கவாசகர் ஸ்ரீ நடராஜர் சன்னதியில் ஐக்கிய விழா நடபெற்றது. முன்னதாக மாணிக்கவாசகர் அபிபேஷகம் ஆராதனை மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. பின்னர் இரவு ஸ்ரீ நடராஜர் சன்னதியில் மாணிக்கவாசகர் ஐக்கிய விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.