கருட புராணம் பற்றி தெரியுமா?
ADDED :899 days ago
பதினெட்டு புராணங்களில் ஒன்றான கருட புராணத்தை எழுதியவர் வியாசர். பெயரைச் சொன்னதும் மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனின் வரலாறு எனத் தோன்றும். ஆனால் இதில் மரணத்திற்குப் பின் உயிர்கள் எங்கே போகின்றன? சொர்க்கம், நரகம் இருக்கிறதா? அங்கே உயிர்களின் நிலை என்ன என்பது பற்றி விவரிக்கிறது இந்நுால். மகாவிஷ்ணு உபதேசம் செய்ய கருடன் கேட்டதால் இப்பெயர் வந்தது. இதன் பின்னர் நைமிசாரண்யம் காட்டில் வாழ்ந்த சூதமுனிவர் அங்கிருந்த மற்ற முனிவர்களுக்கு இதை உபதேசித்தார். இறந்த உயிர் நற்கதி பெற இதைப் படிப்பது நல்லது