திருவேடகம் எல்லைகாளியம்மன் கோயிலில் ஆனி உற்ஸவம்
ADDED :890 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகத்தில் உள்ள எல்லைகாளியம்மன் கோயிலில் ஆனி மாத உற்ஸவ திருவிழா கடந்த ஜூன்.20ல் செவ்வாய் சாற்றி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து அம்மன், மீனாக்ஷி, காமாக்ஷி, காளி, அம்மன் தபசு, தனலெட்சுமி, ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அவதாரங்களில் நான்கு ரத வீதியில் புறப்பாடானது. காளியம்மன் அவதாரத்துடன் வைகையில் இருந்து சக்தி கரகம் எடுத்தனர். நேற்று மறுபடியும் எல்லைகாளியம்மனாக அவதரித்த பின்பு பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும், பொங்கல், மாவிளக்கு எடுத்து ஊர்வலமும், முளைப்பாரி அழைப்பும் நடந்தது. இதையடுத்து நேற்று கரகம், முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக சென்று வைகையில் கரைத்தனர். கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.