உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் படிகள் சீரமைப்பு

பழநி முருகன் கோயில் படிகள் சீரமைப்பு

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு செல்ல பயன்படும் படிப்பாதையில் உள்ள படிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பழநி முருகன் கோயிலுக்கு செல்ல யானை பாதை, படிப்பாதை, வின்ச், ரோப்கார் சேவைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானோர் படிப்பாதை மற்றும் யானை பாதையை பயன்படுத்தி வருகின்றனர். காவடி, அழகு குத்தி, தீர்த்தக்காவடிகள் கொண்டு வரும் பக்தர்கள் பெரும்பாலும் படிப்பாதையை பயன்படுத்துகின்றனர். படி பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். யானை பாதை, படிப்பாதை சந்திக்கும் இடத்திலிருந்து இரட்டை விநாயகர் கோயில் வரை படிகள் உள்ளது. அவற்றில் தற்போது அப்படிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிய கற்கள் பதிக்கும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !