உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சனி மஹா பிரதோஷம்: பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் சனி மஹா பிரதோஷம்: பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம்: சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ் தானத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரர், கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள மஹாநந்திக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்காரம் நடந்தது. கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வர், மலை அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில் காசி விஸ்வநாதர், அங்காள பரமேஸ்வரி சமேத குருசாமி கோயிலில் உள்ள சிவபெருமான், மலைக்கு பின்புற முள்ள பால்சுனை கண்ட சிவபெருமான், மலை மேல் காசி விஸ்வநாதர், தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் சொக்கநாதர், திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !