சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :887 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சனி பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு இன்று காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:30 மணி வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சனி பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.