வாலீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :887 days ago
சுந்தராபுரம்: சுந்தராபுரம் அடுத்து குறிச்சியில் பழமையான வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிய கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த, 27ல் துவங்கியது. விக்னேஸ்வர பூஜை, யாக பூஜை உள்ளிட்டவை நடந்தன. கொடிமரம் கோவில் முன் நடப்பட்டது. தொடர்ந்து, 29 காலை, 9.00 மணிக்கு மேல் கலசம், தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து அன்னதானமும், மாலை திருகல்யாண உற்சவம், சாமி வீதியுலா நடந்தது. திரளானோர் பங்கேற்றனர்.