பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :887 days ago
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 5ம் ஆண்டு வருஷாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டி அர்ச்சகர்கள் தினேஷ் சிவம், கார்த்திக் உட்பட அர்ச்சகர்கள் ருத்ர யாகம் பூஜை மற்றும் ஹோமம் பூஜைகள் நடத்தினர். ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை குருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை சேவா சங்கம் தலைவர் சரவணன், திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பரசூரிய வேலு, நாகராஜன், சந்திரசேகரன், குணசேகரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.