சிறப்பான கொள்கை
ADDED :982 days ago
* நேர்மையே சிறந்த கொள்கை.
* செய்யும் செயலை மன நிறைவோடு செய்யுங்கள்.
* வாழ்க்கை மிகவும் எளியது. அதை நாம் தான் சிக்கலாக்கி கொள்கிறோம்.
* துன்பத்தையும் வறுமையும் சிறிது காலம் அனுபவிப்பவர்கள் நன்மையின் எல்லைக்கு செல்வர்.
* தேடிசேர்க்கும் பணத்தினை நற்செயலுக்கு பயன்படுத்துங்கள்.
* பிச்சைகாரர்கள், பைத்தியக்காரர்கள், மனநோயாளிகள் உதவி செய்யுங்கள்.உதவுபவரின் எண்ணம் மேலோங்கும்.
* கோபம் ஏற்படும் போது அதற்கான காரணத்தை ஆராயுங்கள்.
* நல்லவர்களால் மட்டுமே இவ்வுலகம் இயங்குகிறது.
* எதிர்பார்ப்போடு பிறருக்கு செய்யும் உதவியால் எந்த பயனும் இல்லை.
* சகோதர சகோதரிகளிடம் இணக்கமாக இருங்கள்.
* தினந்தோறும் புத்திக்கு வேலை கொடுங்கள்.
* குழந்தைகள் முன்பு மற்றவர் குறைகளை பேசாதீர்கள்.
– பொன்மொழிகள்