உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஆவினன்குடி கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம்

திருஆவினன்குடி கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம்

பழநி: பழநி, திருஆவினன்குடி கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. பழநி முருகன் கோயிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் உள்மண்டபத்தில் பூஜை நடைபெற்றது. சாயரட்சை பூஜையில் திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமிக்கு அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. இதில் கோயில் கண்காணிப்பாளர் ராஜா, கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்தய்யர், உற்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !