பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :895 days ago
பழநி: பழநி, பெரிய நாயகி அம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி, பெரிய நாயகி அம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரிய நாயகி அம்மன் கோயிலில் புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம், முத்துகுமாரசுவாமி மண்டபத்தில் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீர், பெரியநாயகி அம்மன் கோயிலில் பிரகாரத்தில் எடுத்துவரப்பட்டது. கைலாசநாதர், பெரியநாயகியம்மன், சோமாஸ்கந்தர் சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து அய்யர், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.