அருணாசலேஸ்வரர் கோவிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1147 days ago
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு இன்று வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.