ஆனி பிரமோற்சவம்: மாட வீதி வலம் வந்து அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்
ADDED :1125 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ (தட்சிணாயன புண்ணிய காலம்) திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஆறாம் நாள் காலை உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.