உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்னம்பட்டியில் கட்டுகோப்புடன் சிறப்பாக நடந்த கோயில் திருவிழா

தென்னம்பட்டியில் கட்டுகோப்புடன் சிறப்பாக நடந்த கோயில் திருவிழா

வடமதுரை: தென்னம்பட்டியில் கிராம மக்கள் சுய கட்டுப்பாடுகளை மீறாமல் ஊர் திருவிழாவை கட்டுகோப்புடன் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

வடமதுரை அருகே தென்னம்பட்டியில் காளியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு 13 ஆண்டுகள் இடைவெளியில் நடப்பாண்டு திருவிழா கடந்த ஜூன் 25ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. இங்குள்ள 6 சமூக பெரியத்தனகாரர்கள் வகையறா சார்ந்த மக்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் திருவிழா சுற்றுவட்டார பகுதி கிராமங்களுள் சுய கட்டுப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. இத்திருவிழா ஆலோசனை கூட்டத்தில், தனிநபர், சங்கம், கட்சி என யாருமே பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது, போஸ்டர்கள் ஒட்ட கூடாது, மஞ்சள் நீராட்டு விழாவில் மஞ்சள் தவிர வேறு எந்த பொருளும் கலக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜூலை 9 துவங்கி முக்கிய பாரம்பரிய வழிபாடுகளை நடத்தினர். இறுதி நிகழ்ச்சியாக இன்று மஞ்சள் நீராட்டுதலுடன் பகவதியம்மன் பூஞ்சோலை சென்ற நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது. விழா துவக்கம் முதல் இறுதி வரை மக்கள் ஊர் கட்டுப்பாடுகளை மதித்து நடந்தனர். தென்னம்பட்டி கிராம மக்களின் சுய கட்டுப்பாடுகளால் பிரச்னை இல்லாத ‘மாடல்’ திருவிழா போல நடந்து முடிந்ததால் பாதுகாப்பு பணி போலீசார் ஊர் நிர்வாகிகளை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !