உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னத்தூர் பொன் காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா

குன்னத்தூர் பொன் காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் புகழ்பெற்ற அருள்மிகு பொன் காளியம்மன் கோவில் உள்ளது.

கோவில், குண்டம், தேர் திருவிழா கடந்த 5 ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி, வருகிற 17 ந் தேதி காலை மகுடம் ஏற்றுதல், மாலை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தல், இரவு கிராம சாந்தி, 18 ந் தேதி காலை கொடியேற்றம், இரவு சாமிக்கு நகை எடுத்து வர வலையபாளையம் செல்லுதல், 19 ந் தேதி காலை அம்மை அழைத்து வருதல், மாலை குண்டம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 20 ந் தேதி அதிகாலை பாரியூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மனை அழைத்து வருதல், தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 11 மணிக்கு ரத ஆரோகனம், மாலை ரத உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. 22 ந் தேதி இரவு அலங்கார முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வருதல், 23 ந் தேதி இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வருதல் 24 ந் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு சுவாமி நகைகளை வலையம் பாளையம் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !