உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக மகா ருத்ர யக்ஞம்: லிங்கேஸ்வரரை தரிசித்து பக்தர்கள் பரவசம்

உலக நன்மைக்காக மகா ருத்ர யக்ஞம்: லிங்கேஸ்வரரை தரிசித்து பக்தர்கள் பரவசம்

கோவை : ராம் நகர், ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் உலக நன்மைக்காக பிரியோதசி திதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் திரவ பிரதோஷம் கூடிய தினத்தில் மகா ருத்ர மகா மங்கள வைபவம் நடந்தது. ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் சன்னிதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக காலை 6:00 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம் அதைத்தொடர்ந்து மகன் யாச ஜெபம், ருத்ர ஆவாஹனம், ஸ்ரீ ருத்ர ஜெபம், ஏகாதச திரவிய ருத்ராபிஷேகம், ஸ்ரீ ருத்ர ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து கலசாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் வேத பண்டிதர்கள்மகா ருத்ரதத்தை ஜெபித்தபடி இருந்தனர் .இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !