கேரளாவில் ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்து வழிபாடு
ADDED :818 days ago
பாலக்காடு: கேரள மாநிலத்தில் ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி பல இடங்களில் நடந்தது.
ஆலுவ சிவன் கோவில், திருவனந்தபுரம் திருவல்லம் பரசுராமர் கோவில், மலப்புரம் திருனாவாயா முகுந்தர் கோவில், கோழிக்கோடு திருநெல்லி சிவன் கோவில், திருச்சூர் மாவட்டத்தில், பாம்பாடி ஐவர் மடம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், யாக்கரை விஸ்வேஸ்வரர் கோவில் அருகே அதிகாலை முதல் ஏராளமானோர் மறைந்த பெற்றோர், உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின், வீட்டில் இலை போட்டு முன்னோருக்கு ஐதீக முறைப்படி உணவு படைத்து விட்டு, விரதத்தை முடித்துக் கொண்டனர்.