பக்தர்கள் பயன்பாட்டிற்காக பழநி கோயிலில் ஆஸ்பத்திரி!
பழநி: பக்தர்கள் பயன்பாட்டிற்காக பழநி கோயிலில் முதன் முதலாக இரண்டு இடங்களில் மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது.தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் காலங்களில் மட்டும் பக்தர்களுக்காக மலைகோயிலில் முதலுதவி மையம் செயல்பட்டு வந்தது. தற்போது கீழ் வின்ச் ஸ்டேஷன், மலைகோயில் மணி மண்டபம் அருகே பக்தர்களின் பயன்பாட்டிற்காக இரண்டு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைகளில் பக்தர்கள் மட்டுமின்றி கோயில் பணியாளர்கள், முடியிறக்கும் தொழிலாளர்கள், கோயிலை சார்ந்த கல்வி நிறுவனங்களில் பணி புரிபவர்களும் சிகிச்சை பெறலாம். பத்து லட்ச ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது. கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் றும்போது,""பக்தர்களின் பயன்பாட்டிற்காக மலைகோயிலில் இரண்டு இடங்களில் மருத்துவமனைகள் திறக்கப்பட்டு செயல்படுகிறது. முதன் முதலாக இந்த மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது, என்றார்.