உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூலை, ஆக., மாதங்களில் தக்காளி விலை உயரும்; முன்பே பஞ்சாங்கத்தில் கணிப்பு

ஜூலை, ஆக., மாதங்களில் தக்காளி விலை உயரும்; முன்பே பஞ்சாங்கத்தில் கணிப்பு

திருப்பூர்,: தக்காளி விலை உயரும் என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது. தக்காளி விலை கிலோ 100 ரூபாயைத் தாண்டியது. சில வாரங்களாக தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே உள்ளது. வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையும் திடீரென உயர்வை நோக்கி செல்கிறது. ஆற்காடு சீத்தாராமய்யர் பஞ்சாங்க குறிப்பில், இவ்வாண்டு ஜூலை, ஆக., மாதங்களில் தக்காளி விலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த திருவருள் ஜோதிட கல்வி மைய பேராசிரியர் மீனம் ராஜூவிடம் கேட்டபோது, காலபுருஷனுக்கு, நான்காம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் ஐந்தாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் உள்ளார். நான்காம் இடமான, உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் செவ்வாய் நீசமாகிறார். இதனால், தக்காளி, கத்தரி போன்ற அழுக கூடிய உணவு பொருட்கள் அனைத்தும், விலை உயர்வது இயற்கை. செவ்வாய் நீச ஸ்தானத்தை விட்டு, 15 டிகிரி அளவுக்கு விலகி செல்லும் போது பாதிப்பில் இருந்து விடுபடும். குருவின் பார்வை உள்ளதால் படிப்படியாக விலை குறையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !