பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை
ADDED :1124 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடைபெற்றது. மூலவருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து, பெண்கள் நெய் தீபம் ஏற்றியும், மாவிளக்கு எடுத்தும், வழிபாடு செய்தனர். பின்பு அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற குழுவினரின் 1008 குங்கும அர்ச்சனையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று, மாங்கல்ய பூஜை செய்து வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.