மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா; குவிந்த பக்தர்கள்
கோவை : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆடிக்குண்டம் விழா கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 23ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இன்று அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அலங்காரம் செய்த அம்மன் சுவாமியை, கோவிலுக்கு அழைத்து வந்தனர். பூசாரி ரகுபதி குண்டத்திற்கு பூஜை செய்து, பூ பந்து, எலுமிச்சை பழத்தை உருட்டி விட்டார். அதன் பின் முதலில் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள், கரகம் வைத்தவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் என ஏராளமானவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.