உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமலை ரங்கநாதர் கோயிலில் ஆடிப்பூரம் விழா

பாலமலை ரங்கநாதர் கோயிலில் ஆடிப்பூரம் விழா

பெ.நா.பாளையம்: ஆடிப்பூர திருநாளையொட்டி, பாலமலை ரங்கநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

ஆடிப்பூர திருநாள் அன்று வைணவ திருத்தலங்களில் ஆண்டாள் உற்சவ நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் உள்ள ரங்கநாதர் திருக்கோவிலில் விஸ்வரூப தரிசனம், பால் பூஜை நடந்தன. பின்னர், ஆண்டாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனமும், அபிஷேகமும், யாக வேள்வியும் நடந்தன. ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் இடிகரை, நாயக்கன்பாளையம் பஜனை மற்றும் திருப்பாவை கோஷ்டியாருடன் திருவீதி எழுந்தருளினார். இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், திருமலை நாயக்கன்பாளையம், நாயக்கன் பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், நாயக்கனூரில் உள்ள நரசிங்கபெருமாள் கோவில், காளிபாளையம் திருமலை ராயபெருமாள் கோவில், பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவில்களில் ஆடிப்பூர உற்சவம் விமர்சையாக நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !