உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்தினி கோட்டத்தில் கண்ணகி வீடு பேறு அடைந்த நாள் விழா

பத்தினி கோட்டத்தில் கண்ணகி வீடு பேறு அடைந்த நாள் விழா

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த பத்தினி கோட்டத்தில்  கண்ணகி வீடு பேறு அடைந்த நாள் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினிக் கோட்டத்தில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் அனுடம் நட்சத்திரம் அன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  கண்ணகி வீடு பேறு நாள் வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பத்தினி கோட்டத்தில் உள்ள கண்ணகியின்  பெருமைகள் குறித்தும் அறிஞர் பெருமக்கள் சிறப்புகளை எடுத்து கூறினார்கள். பின்பு கண்ணகிக்கு பால், இளநீர், தயிர், சந்தனம், மஞ்சல், உள்ளிட்ட பலவிதமான திரவியப்பொடிகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரமும், மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பத்தினிக் கோட்டம் அறங்காவலர் ராஜசேகர் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நகரத்தார்கள்,ஏராளமான பொதுமக்கள், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு  வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !