உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் கோவிலில் விஷேச மூல மந்திர நட்சத்திர ஹோமம் நடைபெற்றது.

வீர ஆஞ்சநேயர் கோவிலில் விஷேச மூல மந்திர நட்சத்திர ஹோமம் நடைபெற்றது.

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் விசேஷ மூல மந்திர ஹோமம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அவிநாசியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் மாதம்தோறும் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு விசேஷ மூல மந்திர ஹோமம் நடைபெற்று வருகின்றது. இதில், மூல நட்சத்திரமான நேற்று அதிகாலை முதல் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !