அருப்புக்கோட்டை அருகே ஆடிப் பொங்கலை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
ADDED :803 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆடி பொங்கலை முன்னிட்டு காளியம்மாள், சித்தி விநாயகர், கூட்டு அய்யனார் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அருப்புக்கோட்டை அருகே ஆ. கல்லுப்பட்டியில் உள்ள சித்தி விநாயகர், காளியம்மாள், கூட்டு அய்யனார் கோயில்களில் ஆடி பொங்கல் விழா நடந்தது. பொங்கலை முன்னிட்டு பெண்கள் கோயிலில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக அய்யனார் கோயில் வரை சென்று வழிபட்டனர். சித்தி விநாயகர், காளியம்மாள், கூட்டு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் அலங்காரங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.