உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை முத்துமாரியம்மன் கோயில் ஆடி விழா

கோட்டை முத்துமாரியம்மன் கோயில் ஆடி விழா

திருப்புத்தூர்: திருப்புத்தூர் நடுத்தெரு  கோட்டை முத்துமாரியம்மன் கோயில்  ஆடித்திருவிழா நடந்தது.

திருப்புத்தூர் கோட்டைக்குள் இந்த  முத்துமாரியம்மன் கோயில் உள்ளதால் கோட்டையின் காவல்தெய்வங்களில் ஒன்றாக மக்கள் இந்த அம்மனை வழிபட்டனர். போருக்கு முன்பாக  இங்கு போர் ஆயுதங்களை வைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.  கடந்த 193 ஆண்டுகளாக இக்கோயிலில் ஆடி மாதத்தில் பாரித்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஜூலை 25ல்  காப்புகட்டி விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவு அம்மனுக்கு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. பெண்கள் கும்மியடித்து அம்மனை பிரார்த்தித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு திரளாக  பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து கோட்டை முத்துமாரியம்மன்  கோயிலிலிருந்து  ஊர்வலமாக புறப்பட்டு தேரோடும் வீதிகளின் வழியாக கோயில் வந்தனர்.  நேற்று காலை கோயிலிலிருந்து மதுக்குடங்கள்,பாரியுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருத்துளிநாதர் கோயில், வீரமாகாளியம்மன், பூமாயி அம்மன் கோயில்களில் வழிபாடு முடித்த பின்னர் தெப்பக்குளமான சீதளிகுளத்தில் பாரியை கரைத்தனர். ஏற்பாட்டினை  ஸ்ரீ கோட்டை முத்துமாரியம்மன் கோயில் டிரஸ்ட், பரம்பரை அறங்காவலர், திருவிழா குழு, திருப்பணிக் குழு, திருக்கோயில் பராமரிப்பு குழு, நிர்வாக குழு ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !