கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்
ADDED :829 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம் நடந்தது.
திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள பழமையான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி மாத மூன்றாம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு வனிதா கிளப் சார்பில் மகா சண்டி ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு நவகலச்தில், நவசண்டிகள் ஆவாகனம் செய்து உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, மகா சண்டி ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி, அம்மனுக்கு நவகலச அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. கோவில் அர்ச்சகர் முரளிதர சுவாமிகள் பூஜையை முன் நின்று நடத்தினார். ஆரியவைசிய சங்க தலைவர் சர்வேஸ்வரன் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.