/
கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம்; புனித நீராடி சுவாமி தரிசனம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம்; புனித நீராடி சுவாமி தரிசனம்
ADDED :1139 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று விடுமுறை தினம் யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வந்தனர். இவர்கள் முதலில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். இதன்பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியத்தால் கோயில் பிரகாரங்கள், அக்னி தீர்த்த கடற்கரை, சன்னதி தெருவில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ராமேஸ்வரத்தில் ஓட்டல், டீக்கடைகளில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.