கருவலூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ மஹா சண்டிகா யாகப் பெருவிழா
அவிநாசி: கருவலூரில் மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ மகா சண்டிகா யாகப் பெருவிழா நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ மஹா சண்டிகா யாகப் பெருவிழா,சிவாச்சாரியார் நாச்சிமுத்து சிவம் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக 9ம் தேதி கணபதி ஹோமம், ஸ்ரீ சண்டிகா தேவி ஆவாஹனம் ஆகியவை நடைபெற்றது.அதன் பின்னர், நேற்று முன்தினம் ஸ்ரீ மூல மந்திர ஜெபம், ஹோமம், ஸ்ரீ துர்கா, லட்சுமி, சரஸ்வதி, நவகோள் வேள்வி யாகங்கள் நடைபெற்றது. ஆடி வெள்ளியான நேற்று ஸ்ரீ மூலமந்திர வேள்வி, வசோத்தாரை,மஹா பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்று ஸ்ரீ மாரியம்மனுக்கு மஹா கலசாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ மஹா சண்டிகா யாகம்நிறைவு பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ மஹா சண்டிகா யாக பெருவிழாவில், கட்டளைதாரர் கருப்பசாமிக் கவுண்டர், அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர்கள் அர்ச்சுணன், தமிழ்செல்வன், கோவில் செயல் அலுவலர் குழந்தைவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.