அரியநாச்சி அம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்
ADDED :847 days ago
கமுதி: கமுதி அருகே வேப்பங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா முன்னிட்டு கடந்த ஆக.4ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்புபூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அலகுவேல் குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.பின்பு அரியநாச்சி அம்மனுக்கு பால்,மஞ்சள்,சந்தனம் பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜைகள் நடந்தது. விழா கமிட்டியாளர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை முளைக்கட்டு திண்ணையிலிருந்து முளைப்பாரி தூக்கி கிராமமக்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.விழாவில் கமுதி சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.