மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றுடன் துவக்கம்
ADDED :788 days ago
புதுச்சேரி; புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றுடன் துவங்கியது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 63 ம் ஆண்டு பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றுடன் சிறப்பாக துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மணக்குள விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.