உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனமே மலோபலம்!

மனமே மலோபலம்!

அக்டோபர் 15ல், மகாளய அமாவாசை வருகிறது. இறந்த நம் முன்னோரை நினைவு கூரும் நாள் அது. ஒரு வீட்டில் யாராவது இறந்துவிட்டால், அந்த வீட்டை துஷ்டி வீடு, கேத வீடு, துக்க வீடு என்கிறார்கள். துஷ்டி என்றால் மனோபலம் என்று பொருள். உறவினரை இழந்து துக்கமாக இருப்பவருக்கு ஆறுதல் சொல்லி மனோபலத்தை ஊட்டி வருவதால் அதை துஷ்டி வீடு என்றனர். இன்னொரு அர்த்தமாக, நமக்கும் ஒருநாள் இதே நிலை ஏற்படப் போகிறது. அதற்குத் தயாராக வேண்டும் என்ற மனபலத்தை ஊட்டுவதாகவும் உள்ளது. மதுரை பகுதியில் இறப்பை கேதம் என்ற தூய தமிழ்ச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். கேதம் என்றால் இழப்பு என்ற பொருளும், வீடு ஏகுதல் (மோட்சம் அடைதல்) என்ற பொருளும் இருக்கிறது. இதையே இன்றைய நடைமுறைத் தமிழில் துக்க வீடு என்கிறோம். மகாளய அமாவாசையன்று தீர்த்தக்கரை
களுக்குச் சென்று தர்ப்பணம் செய்து வந்தால், இதுவரை செய்யாமல்விட்ட எல்லா அமாவாசை தர்ப்பணங்களையும் செய்ததாகச் சொல்வர். மறக்காமல் நம் பெரியவர்களை நினைவு கூர்வோமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !