பழநியில் பிட்டுக்கு மண் சுமந்த படலம்; தங்க குதிரையில் சுவாமி உலா
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. விழாவில் சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த படலம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிளையாடல் புராணத்தில் பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில் வைகையில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையை உடைத்தது. பாண்டிய மன்னனின் ஆணைப்படி வந்தி எனும் மூதாட்டிக்காக சிவபெருமான் பிட்டுக்காக பணியாற்றினார். அப்பணியை செய்யாத சிவபெருமானை அரசன் பிரம்பால் அடித்தார். அந்த அடியை அனைவரும் உணரும் படி இறைவன் திருவிளையாடல் நடத்தினார். இவ்விழா ஆண்டுதோறும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியாக, பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று ( ஆக.26.,) சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் பிட்டுக்கு மண் சுமக்கும் படலம் நடைபெற்றது. சந்திரசேகர், ஆனந்தவள்ளிஅம்மன், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.