உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பவித்ர உற்ஸவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பவித்ர உற்ஸவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் சன்னதிதில் பவித்ர உற்சவம் நேற்று முதல் துவங்கியது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் ஏகாதசி துவங்கி 7 நாட்கள் பவித்ர உற்சவம் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று மதியம் 3:00 மணிக்கு பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடந்தது. பின்னர் வேதபிரான் திருமாலிகையிலிருந்து கொண்டு வரப்பட்ட மஞ்சள் நூல் பவித்ர மலைகள் சாற்றப்பட்டு திருவாய்மொழி, சேவாகாலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோயிலில் தினமும் மதியம் 3:00 மணிக்கு மேல் பவித்ர உற்சவம் உற்சவம் நடக்கிறது. ஏழாம் நாளான செப். 2 கருட சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பட்டர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !