/
கோயில்கள் செய்திகள் / விசித்திர தேரோட்டம்; கீழே விழுந்து விழுந்து வலம் வந்த அம்மன் தேர்.. பக்தர்கள் பரவசம்
விசித்திர தேரோட்டம்; கீழே விழுந்து விழுந்து வலம் வந்த அம்மன் தேர்.. பக்தர்கள் பரவசம்
ADDED :828 days ago
திருவாரூர் ; திருவாரூர் அருகே கீழே விழுந்து விழுந்து வலம் வரும் விசித்திரமான தேரோட்ட திருவிழா நடைபெற்றது.
திருவாரூர் அருகே உள்ள தப்பளாம்புலியூர் கிராமத்தில் பிடாரி குளுந்தாளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் விசித்திரமான தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தேரை தோளில் துமந்து வருவர். தூக்க முடியாத நேரத்தில் தேரை கீழே போட்டு விடுவர். மீண்டும் சிறப்பு வழிபாடு செய்து தேரை தூக்கி வருவர். இவ்வாறு பாரம்பரியமாக இத்தேர் திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில், விழுந்து விழுந்து வலம் வந்த அம்மன் தேரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.